எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க கைகோர்ப்போம், புதிய அரசாங்கத்தில் இணையுங்கள் - சஜித்திற்கு ரணில் கடிதம் அனுப்பினார்
ஐக்கிய மக்கள் சக்தியை புதிய அரசாங்கத்தில் இணையுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பிரதமர் இன்று சனிக்கிழமை, 14 ஆம் திகதி கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
'இந்த நெருக்கடியான நேரத்தில், பாரம்பரிய அரசியலை ஒதுக்கிவிட்டு எரியும் பிரச்சினைகளைத் தீர்க்க கைகோர்ப்போம். இந்த நெருக்கடியிலிருந்து விடுபட ஒன்றிணைந்து செயல்பட, அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருக்க உங்களை அழைக்கிறேன் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணிலின் இக்கடிதத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அல்லது சஜித் பிரேமதாஸாவின் உடனடி பிரதிபலிப்பு யாது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை.
Post a Comment