உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவருடைய, மண்ணரை வாழ்க்கை இவ்வளவுதான்...!
அபுதாபி ,துபாய், ஷார்ஜா, ராஸ்அல் கைமா, அஜ்மன், உம்மல் குயன், புஜைரா ஆகிய ஏழு அமீரகங்களை கட்டி ஆண்ட ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மன்னரின் அடக்கத்தலம் இது.
உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான இவர் தனது 73வது வயதில் காலமானார்.
ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக இருந்தார். ஆனால் 2014இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்
அவரது மறைவையொட்டி நேற்று 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கொடிகள் பறக்க விடப்பட்டது.
40 நாட்களுக்கு அவரது மறைவுக்கான துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் முதல் 3 நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறையில் பணிகள் நிறுத்தப்படுவதாகவும்.
இறைவன் அவரது பிழைகளை மன்னிப்பானாக, நமது பாவங்களையும் மன்னிப்பானாக...!!
Post a Comment