Header Ads



அதிகாரங்கள் தொடர்பில் ரணில் - கோட்டாபய மோதல் தீவிரம் அடையலாம்...!


அரசியலடைப்பில் திருத்தம் மேற்கொள்ளவும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றி, பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கும் அரசியலமைப்பை கொண்டு வருவதில் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் உறுதியாக நின்றார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களிலும், இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

 இவ்வாறான நிலையில் அடுத்து வரும் நாட்களில் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மோதல்கள் தீவிரமடையலாம் என நம்பப்படுகிறது.

முன்னரும் அதிகாரங்கள் தொடர்பில் மைத்திரிக்கும், ரணிலுக்கும் மோதல்கள் எழுந்து அது பொதுஜன பெரமுனக்கு பெரும்பான்மை பலத்தையும் வழங்கியிருந்தது.

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் எந்தவொரு அமைச்சும் செல்லக் கூடாது என்பது தொடர்பில் ரணில் அவதானமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இவ்வாறான பின்னணியில் முறுகல்களும், முரண்பாடுகளும் தவிர்க்க முடியாத விடயங்களாக இருக்குமெனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

“தேசத்தைக் காப்பாற்றவும், எரிபொருள், எரிவாயு, மின்சாரம் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும். அதே வேளையில் இந்த நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.