Header Ads



முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்பு கொண்ட ரணில், இம்தியாஸுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறியவர், இன்று தமக்கு ஆதரவு தேடினார்


 - அன்ஸிர் -

பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

ரணிலின் தொலைபேசி அழைப்பை பெற்ற, முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் வெள்ளிக்கிழமை இரவு, 13 ஆம் திகதி உறுதிப்படுத்தினர்.

பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக,  ஜனாதிபதி கேத்தபய ராஜபக்ஸவை, ரணில்  சந்திக்கச் சென்றிருந்தார். அச்சந்திப்புக்கு முன்னதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டார் ரணில்.

ந்திப்பில் ரணிலுக்கு, பிரதமர் பதவியை வழங்க ஜனாதிபதி இணங்கியதை அடுத்து சந்திப்புக்கு பின்னதாகவும், ரணில் முஸ்லிம் அரசியல்வாதிகளை 2 முறைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்,

தமது தலைமையில் நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்திற்கு, ஆதரவு தருமாறு அவர் முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்கள் கோரியுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் பலருக்கு, ரணிலுடன் நெருக்கமான உறவே காணப்படுகிறது. எனவே தனக்கு ஆதரவளிக்கலாம் என்பது ரணிலின் நம்பிக்கையாக உள்ளது.

அண்மையில் பிரதி சபாநாயகர் பதவிக்கான வாக்களிப்பு நடைபெற்ற போது, முஸ'லிம் அரசியல்வாதிகள் சிலரிடம் இம்தியாஸ் பார்க்கீர் மரிக்காருக்கு வாக்களிக்க வேண்டாமென பகிரங்கமாகவே கூறிய ரணில், தற்போது தமது பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்ள, தமக்கு ஆதரவளிக்குமாறு  எங்களிடம் கெஞ்சிறார் என முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.