Header Ads



ஏறாவூரைச் சேர்ந்தவர் அரசியல் தற்கொலை செய்தமை மௌலானாவுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும். நாம் கராரான நடவடிக்கைகளை சரியாக எடுத்துள்ளோம்


- நூருல் ஹுதா உமர் -

முழு சமூகத்தின் அவமான சின்னமாக ஒருவர் மாறியுள்ளார் என்கின்ற வேதனை தான் எங்களுக்கு உள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் அமைச்சுப் பதவி எடுத்துள்ள விவகாரம் மிக மோசமான விமர்சனத்துக்கான விவகாரமாக மாறியுள்ளது என்பது சர்ச்சைக்குரிய விடயம் அல்ல.

“அது ஊரும் அங்கிகரிக்கின்ற விடயம் அல்ல. ஆனால், அவர் தாமாக சென்று அரசியல் தற்கொலை செய்துகொண்டுள்ளதையிட்டு, அலிசாஹிர் மௌலானாவுக்கு ஆத்ம திருப்தி இருக்கும்.

“தலைமைக்கு எதிராக தாறுமாறாக பேசிக்கொண்டு திரிகின்றவர்கள் ஏன் இவற்றை அவர்கள் பிரசன்னமாக இருந்த அரசியல் உச்சபீடத்தில் கதைக்கவில்லை என்பது தான் மிக பிரச்சினைக்குரிய விடயம்.

“ஒவ்வொரு அரசியல் உச்சபீடக் கூட்டத்தின் முழுமையான அதன் பதிவுகள் இருக்கின்றன. தேவை என்றால் பதிவுகள் வெளிக்கொண்டுவரப்படும்.

“நடவடிக்கைகள் எடுக்கும் விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டாலும் நாங்கள் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காக தான் சற்று நேரம் எடுக்க வேண்டியிருந்தது.

“இருந்தாலும் இந்த விவகாரத்தில் கராரான நடவடிக்கைகளை சரியாக எடுத்துள்ளோம்“ என்றார். 

No comments

Powered by Blogger.