Header Ads



அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுத்த விவகாரம், ஒழுக்க விதிகளை மீறியமை உறுதிப்படுத்தப்பட்டால் வைத்தியரின் அனுமதிப்பத்திரம் இரத்து


லங்கா தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சென்றிருந்த போது, வைத்தியரினால் சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டமை சம்பவம் தொடர்பான எவ்வித முறைப்பாடுகளும் தமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

 முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது

வைத்தியர் தமது ஒழுக்க விதிகளை மீறியமை மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டால், அவரது அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்யவதற்கும், சேவையில் இருந்து இடைநிறுத்துவதற்கும் வாய்ப்புள்ளதாக இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கும், நிராகரிப்பதற்குமான உரிமை வைத்தியருக்கு உள்ளது. எனினும் வைத்தியசாலையினால் எந்தவொரு நோயாளர்களையும் நிராகரிக்க முடியாது இந்த சம்பவம் தொடர்பில், லங்கா வைத்தியசாலை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது  


No comments

Powered by Blogger.