ஜனாதிபதியின் முன் பதவியேற்றது அருவருப்பானது என்று கூறிய ஹரீன் - சிரித்துக் கொண்டே பதவியேற்கும் புகைப்படம் வெளியானது
ஐக்கிய மக்கள் சக்தியின் எனது நண்பர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த செய்தியை மறுத்தனர்.
'இப்போ எல்லாம் ஓகே ஆகிவிட்டது.அவர் போகமாட்டார்' என்ற அவர்களின் பதிலை கேட்கும்போதெல்லாம் அவர்களை நினைக்க பாவமாக இருக்கும்.நல்ல நண்பன் கட்சி மாறக்கூடாதென்ற அவர்களின் அவா புரிந்தாலும் ,இந்த சாக்கடை அரசியலில் கொள்கையா கோட்பாடா என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன்...
உயிர்த்த ஞாயிறு தினமன்று சம்பவங்கள் எதுவும் நடக்கலாம் என்று தந்தையார் விடுத்த எச்சரிக்கையினை பகிரங்கப்படுத்தாமல் இருந்த ஹரீன் எம்.பி , நாட்டின் நலனுக்காக பதவியேற்றேன் என்பதெல்லாம் 80 ஆம் ஆண்டுகால சினிமா ஸ்கிரிப்ட்.. அதுவும் வெள்ளிக்கிழமை இன்று சம்பவம் நடந்தது வேறு லெவல்... எல்லாவற்றுக்கும் அப்பால் ,''வெளியே இருந்து ஜனாதிபதியை அனுப்ப முடியவில்லை.அதனால்தான் உள்ளே செல்கிறோம்..'என்று கூறி ஷங்கர் பட ஸ்க்ரிப்ட்டுக்கே டப் பைட் கொடுத்தீர்களே.. அட்டகாசம்...!
இனி , ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பை வழங்கி விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் கோருவார் ஹரீன்.. ரஞ்சன் வெளியே வந்ததும் ஹரீனுடன் சேர்ந்து அவரும் மற்றுமொரு நாட்டுப்பற்றாளராகிவிடுவார்... உள்ளதெல்லா வளங்களையும் வழங்கி ஹரீன் டீமை வளர்த்து சஜித்தை துவம்சம் செய்ய முனைவார் ரணில்.அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு ஹரீன் போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..
கரு ஜயசூரிய ஒருகாலத்தில் பெரும் பெயரும் புகழுடன் இருந்தவர்.. ஆனால் போரை நிறுத்த ஒத்துழைக்கிறேன் என தேசப்பற்றை முன்வைத்து 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ராஜபக்ச அரசுக்கு ஆதரவளித்து அமைச்சையும் பெற்றாரே...பிறகு என்ன ஆயிற்று ? அப்படி செல்லாமல் இருந்திருந்தால் இன்று அவர்தான் ஜனாதிபதி அல்லவா ?
அதெல்லாம் இருக்கட்டும்.ராஜபக்சக்கள் காட்டிய தேசப்பற்று எந்தளவு தீவிரமானது ?அவர்களின் இன்றைய நிலைமை என்ன ?அவர்களையும் விஞ்சிவிடுவாரா ஹரீன் ?
'சேர் பெயில் என்று கூறிய வாயைக் கொண்ட முகத்தை வைத்துக்கொண்டு எப்படி அமைச்சுப்பதவியை ஏற்பேன் ' என்று நினைத்தோ என்னவோ பதவிப்பிரமாணத்தை படம்பிடிக்க வேண்டாமென ஹரீன் கோரியதாக ஒரு கதை உலவுகிறது.
அமைச்சுப் பதவி எடுப்பது என்பது ஹரீனின் இஷ்டம். ஆனால் அதற்கு தேசப்பற்று லேபலை ஓட்டக்கூடாது...
ஏனெனில்...
'அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி'
sivaramasamy
Post a Comment