Header Ads



ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத முதல் நாடு என இலங்கை பெயரிடப்பட்டது


ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டின் முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நாடு தவறவிட்டதை இலங்கையின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. 

இரண்டு சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளுக்கான 30 நாள் கால அவகாசம் நேற்றைய தினம் காலாவதியானது.

இந்த பட்டியலில் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் இடம்பெற்றிருந்ததென மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.