டலஸ், விஜயதாஸ, நிமல், ஆகிய மூவரில் ஒருவரை பிரதமராக்குமாறு கோட்டாபயவிடம் பரிந்துரை
நாட்டில் வன்முறையும் பொருளாதார நெருக்கடியும் மேலோங்கி உள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்பது 22 மில்லியன் இலங்கையர்களின் பிரதான கேள்வியாகும்
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்களை பரிந்துரைத்து 11 கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழு ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
டலஸ் அலகப்பெரும, விஜயதாஸ ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்களை சுயாதீன குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
எனினும் இன்று (11) புதன்கிழமை நடைபெற்ற மற்றுமொரு ஊடவியலாளர் மாநாட்டில், பிரேமதாசாவின் மகன் பிரதமர் பதவியை பொறுப்பேற்க வேண்டுமென, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறியினால் வேண்டுகோள் விடுக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment