இலங்கை மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக இங்கிலாந்திலும் போராட்டம்
இலங்கையில் நடைபெறும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் நிகழ்வொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது.
மூவின மக்களும் பங்கேற்ற இந்நிகழ்வில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.
நிகழ்வில் பங்கேற்றவர்களின் உரைகளுடன், மக்களின் எதிர்ப்பு குரல்களும் மேலோங்கி காணப்பட்டது. அதிகளவிலான முஸ்லிம்களும் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, சுவிஸ், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதுடன், ஆட்சியாளர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் தொடர் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.
Post a Comment