Header Ads



இலங்கையையும் சீனா கைப்பற்றிவிடுமோ, என்ற பயம் உள்ளது, நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க இறைவழிபாடே தேவை


சீனா, திபத் நாட்டைக் கைப்பற்றி புத்த மதத்தை எடுத்துக் கொண்டது போல் இலங்கையையும் சீனா கைப்பற்றிவிடுமோ, என்ற பயம் எனக்கு உள்ளது. எனவே எமது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க இறைவழிபாடே தேவை என அருட்தந்தை ஜோசம் மேரி தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்காக மதத்தலைவர்களின் அலோசனைகள் எனும் தொணிப்பொருளில் மட்டக்களப்பு - கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எனது குருத்துவப் பணியில் 54 வருடங்கள் கழிகின்றன இக்காலத்தில் நான் பல துன்பங்களையும், பல நல்ல விடையங்களையும் கண்டுள்ளேன். ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் பின்னர் கிறிஸ்த்தவ மதத் தலைவர்கள் வீதியில் பேரணியாகச் சென்றார்கள். நாட்டில் எங்கெங்கெல்லாம் அநீதிகள் இடம்பெறுகின்றதோ அதற்கு எதிராக கிறிஸ்தவ மதத் தலைவர்கள் என்ற ரீதியில் குரல் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். எமது நாட்டில் இன்று, நேற்றல்ல பல்லாண்டு காலமாக அரசியல் ரீதியாக பிரச்சினைகள் இருந்து வருகின்றன. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மிகவும் மோசமான பிரச்சினைகள் இருந்துள்ளன

அப்போதும் கூட அகிம்சை வழியில் தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிராம் செய்தார்கள். 1958ம் ஆண்டு மட்டக்களப்பு கச்சேரியில் சத்தியாகிரகம் செய்தவர்களை இராணுவம் இழுத்துக் கொண்டு சென்று ஆலையடிச் சவக்காலையில் வைத்து அடித்தார்கள். தற்போதும் நாட்டில் அகிம்சை ரீதியில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும் மக்களைத் தொடுவதற்கு பயப்படுகின்றார்கள்.

மக்களுக்கு ஏதும் செய்தால் உலக நாடுகள் தட்டிக் கேட்டும் என பயப்படுகின்றார்கள். எனவே, அன்புதான் நமது அத்திவாரம் ஆனால் அது நடக்கவில்லை. அநீதிகளுக்கு எதிராக எதிர்த்துப்போராட வேண்டும் என்பது எமது திருச்சபையின் கொள்கை. தற்போது அதுதான் எமது நாட்டில் நடைபெறுகின்றது.

அநீதிகளுக்கு எதிராக மதத் தலைர்வகள் என்ற ரீதியில் நாங்களும். அமைதியான முறையில் அனைவருக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். தமிழர், சிங்களவர், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். என இறைவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு பதாகைகளுடன் வெளியே வந்து அரசாங்கத்திற்குச் சொல்ல வேண்டும். இவ்வளவு சொல்லியும், அரசாங்கம் காது கேளாதவர்கள் போல், கண்கள் தெரியாதவர்கள்போல், அரசாங்கம் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு இருக்கின்ற அரசாங்கம் மக்களைத் தாக்கப்போகின்றார்களா, மக்களின் உரிமைகளைப் பறிக்கப்போகின்றார்களா? என்ற பயம் எனக்குள்ளது. தற்போது நாட்டில் எரிபொருள் இல்லை, உண்பதற்கு ஒன்றுமில்லை, பணமில்லை, இந்நிலையில் நாட்டில் சீனா போன்ற வெளிநாடுகளின் செல்வாக்கும் அதிகரித்துள்ளன. சீனா, திபத் நாட்டைக் கைப்பற்றி புத்த மதத்தை எடுத்துக் கொண்டதுபோல் இலங்கையையும் சீனா கைப்பற்றிவிடுமோ என்ற பயம் எனக்குள்ளது. எனவே எமது நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க இறைவழிபாடே தேவை.” என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.