Header Ads



ரணிலுக்கு ஆதரவளிக்க மாட்டேன் - திட்டவட்டமாக தெரிவித்தார் றிசாத்


- அன்ஸிர் -

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வட்சப் மூலமாக குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதவது,

பிரதமராக தொடருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எமது ஆதரவு நிச்சயம் தேவைப்படும், ஆனால் அவருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் நான் திட்டவட்டமாக உள்ளேன். நான் மாத்திரமல்ல இன்னும் பல சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களும் எனது நிலைப்பாட்டிலேயே உள்ளனர்.

எனது நெருக்கடியான காலகட்டங்களில் (சிறை வாழ்க்கை) ரணில் விக்கிரமசிங்க குரல் கொடுத்தார். அதனை மறக்கவில்லை. எனினும் அதனைவிட எமது நாடும், எமது சமூகமும், எமது கட்சியின் கொள்கையும்  எனக்கு முக்கியமானது.

அதனடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை. அமைச்சுப் பதவிக்கோ அல்லது எந்த சலுகைக்கோ அசைந்து கொடுக்கும் நபர் இந்த றிசாத் பதியுதீன் அல்ல. இதனை கடந்த காலங்களில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் தலைவர்களும் நமது சமூகமும் நன்கு புரிந்து வைத்துள்ளது எனவும் றிசாத் பதியுதீன் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.