பாதுகாப்புக்குச் சென்ற இராணுவத்தினரை, திருப்பி அனுப்பிய மனோ கணேசன்
- மனோ கணேசன் -
#இராணுவ_ஆட்சியா?
சற்றுமுன் திம்பிரிகஸ்யாய இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் "எனது பாதுகாப்புக்காக" என்று கூறி, எனது ஸ்ரீமகாவிஹார வீதி வீட்டுக்கு வந்தார்கள்.
சற்று முன்னுக்கு முன்;
வழமையான MSD பொலிஸ், மேலதிக மூவர் வந்தார்கள்.
இருதரப்பையும் "நன்றி தம்பிகளா, வேண்டாம்" என திருப்பி அனுப்பி விட்டேன்.
2005-2009, கொழும்பின் வெள்ளை வேன், கடத்தல், படுகொலை நெருக்கடி காலத்தியிலேயே என் இதே வீட்டில்தான் இப்படியே இருந்தேன்.
இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம்.
Post a Comment