ரணிலுக்கு போட்டியாக சர்வதேச பிரதிநிதிகளை சந்திப்பதில் களமிறங்கினார் சஜித்
சமகாலத்தில் நாம் முகம்கொடுக்கும் உணவுப் பிரச்சினை மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதோடு, நுகர்வுக்குத் தேவையான உணவு உற்பத்தியில் இருந்து, நுகர்வு வரை எந்த எந்த வித விஷமும்,தொற்றும் இன்றி சுத்தமாக நச்சுத்தன்மையற்ற பராமரிப்பு விடயங்கள் உள்ளடங்களான உணவு பாதுகாப்பு குறித்து இதன் போது விரிவாக கலந்துரையடப்பட்டது.
விசேடமாக இந்நாட்களில் இலங்கை எதிர்கொள்ளும் உணவு நெருக்கடியும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
2
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறுவர் நிதியத்தின்(UNICEF) இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், இலங்கைக்கான யுனிசெப் நிறுவனத்தின் வதிவிட இணைப்பாளர் ஏம்மா பிரிகாம் இன்று (20) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை சந்தித்தனர்.
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமை காரணமாக சிறுவர்கள் தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment