கோ ஹோம் ரணில் என போராட தேவை கிடையாது, மக்கள் ஏற்கெனவே வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் - சாணக்கியன்
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘கொலைகாரர்களின் ஆதரவுடன் 2013ஆம் ஆண்டுதொகுதி அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் சபையில் பல தடவைகள் பகிரங்க மன்னிப்புகோரியுள்ளேன்.
பிள்ளையான் 600 பேரை கொலை செய்ததாக குறிப்பிடப்படும் விடயத்தில் முன்னாள் பிரதமர் ரணில்விக்ரமசிங்க எனது பெயரையும் குறிப்பிட்டுள்ளமை பொறுத்தமற்றது. ஏனெனில் நான் 1990 ஆம் ஆண்டேபிறந்தேன்.
அத்துடன் ராஜபக்ஷர்களுக்கு ஒருபோதும் சரணம் கச்சாமி குறிப்பிடவில்லை. இந்தநிலையில் 2015 ஆம்ஆண்டு அர்ஜூன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக்கி அதன் மூலம் பாரிய மோசடிக்கு ரணில் விக்கிரமசி்ங்க வழிவகுத்தார்.
அத்துடன் அவரின் உறவினரான அலோசியஸின் மெண்டிஸ் நிறுவனத்துக்கு 3.5 பில்லியன் ரூபா வங்கிஒன்றிடம் கடன் உள்ளது.
எனவே அதனை மீண்டும் கொண்டு வருவதற்கு ரணில் விக்கிரமசிங்க உதவவேண்டும். நாட்டின் தற்போதையநிலைமைக்கு இவரும் பொறுப்புக் கூற வேண்டும்.
நான் அவரது இல்லத்தை முற்றுகையிட முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தைமுற்றுகையிடுவது சாத்தியமற்றது.
கோ ஹோம் ரணில் என போராட வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் மக்கள் ஏற்கெனவே இவரைவீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். தேசிய பட்டியல் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற கோட்பாடுகள் எனக்கு தெரியாது என மொஹமட் முஸாம்பில் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவரை போல் தேசிய பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவில்லை. மக்களின் தெரிவின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என்பதை குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment