ரணில் மிக ராசியானவர், மஹிந்தவின் அர்ப்பணிப்புக்கள் இல்லாமல் போயுள்ளன - அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னா் ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் உள்ளன. இந்தநிலையில், 1939ஆம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பை போன்று குழு முறை அமைக்கப்பட்டு, அமைச்சர்கள் தெரிவுசெய்யப்பட்டால், தேசிய ஐக்கிய அரசாங்க அமைப்பின் ஊடாக செயற்படமுடியும் என்று முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச யோசனை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில், புதிய அரசியலமைப்புக்குள் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (19) கருத்துரைத்த அவர், பொருளாதாரம் தொடர்பில், அதிகாரிகளுக்கும் பொறுப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக செயற்பட்டார்.
இதன் காரணமாக 2001ஆம் ஆண்டு, மறை பொருளாதாரத்தை இலங்கை பெற்றது. 2005ம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தர, நிதியமைச்சின் செயலாளராக பணியாற்றினார்.
இதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை, கடன் பொருளாதாரத்தை பெற்றது.
இதன்பின்னர் 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரை பிபி ஜெயசுந்தவினால் இலங்கைக்கு திவால் பொருளாதாரம் கிடைத்தது என்று சமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.
இதேவேளை அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடல் போராட்டம் மீது தாக்குதல் நடத்த சென்றவர்களை ஏன் பொலிஸ் தடுக்கவில்லை என்று ஏன் கேள்வி எழுப்பினார்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமது இரண்டு தவணை ஜனாதிபதி பதவிக் காலத்தின் பின்னர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றிருக்கவேண்டும்்.
இதுவே சிறந்த செயற்பாடாக இருந்திருக்கும். இன்றைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
இன்று அவர் 50 வருட அரசியல் வாழ்க்கையில் செய்த அர்ப்பணிப்புக்கள் எல்லாமே இல்லாமல் போயுள்ளன.
எனவே அரசியலில் பதவியை ஏற்றுக்கொள்கின்ற அதேநேரம் விட்டுக்கொடுக்கவும் பழகவேண்டும் என்று சம்ல் ராஜபக்ச தெரிவித்தார்.
இதற்கிடையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மிகவும் ராசியானவர் என்றும் சமல் ராஜபக்ச குறிப்பிட்டார். Tw
Post a Comment