ஜனாதிபதி கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும் - சூறாவளியில் சிக்கிய படகில் நான் சென்றுகொண்டிருக்கின்றேன் - அமைச்சர் ஹரீன்
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கொழும்பில் இன்று (20) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
அந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சர் ஹரின்,
நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளேன். ஆனால், இது ஒரு தற்கொலை முயற்சியாகும். சூறாவளி ஒன்றில் சிக்கிய படகில் நான் சென்றுகொண்டிருக்கின்றேன். கப்டன் படகை செலுத்துவதில் தடுமாறுகிறார். அப்படியானால் துணிந்துவந்து கப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.
அதுமட்டுமன்றி, கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் செய்யவேண்டும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment