பிரதமர் ரணில் தனி ஆளாக இருந்தபோதும் மக்களின், நம்பிக்கையை பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனி ஆளாக இருந்த போதும் பிரதமர் பதவியை பெற்றதிலிருந்து ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொது மக்கள் பலரினதும் நம்பிக்கையை பெற்று வருவது மகிழ்ச்சி தருகிறது என ஐக்கிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
நாட்டில் இன்னமும் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறையவில்லை. கேஸ், பெட்ரோல், டீசல் என பல விடயங்கள் இன்னமும் சுமுகமான விநியோகத்துக்கு வரவில்லை.
அத்துடன் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலரும் பதுக்கி வைத்து அசாதாரண தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதை காண முடிகிறது.
இந்த நிலையில் வங்குறோத்தான நாட்டின் பிரதமர் பதவியை துணிச்சலுடன் பெற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்க கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவர முயற்சிப்பது தெரிகிறது.
பாராளுமன்றத்தில் தனி ஆளாக இருந்த போதும் அவர் அதிர்ஷ்டசாலி என்பதில் சந்தேகமில்லை. அதே போல் மிக இலகுவாக, பிரச்சினைகள் எதுவும் இன்றி மீண்டும் புதிய அமைச்சரவையை உருவாக்கியமை மூலம் பிரதமர் ரணிலின் அனுபவமும் முதிர்ச்சியும் தெரிகிறது.
அதே போல் நுரைச்சோலை மின் நிலையம் சீர் செய்யப்பட்டிருப்பதும் பிரதமருக்கும் நாட்டுக்கும் கிடைத்த அதிர்ஷ்டமாகும்.
எமது கட்சியை பொறுத்தவரை நாட்டின் நலனே பிரதானமானதாகும். நாட்டுக்காக யார் சேவை செய்தாலும் அதை பாராட்டுவோம். நாட்டை யார் சீரழிக்க முயன்றாலும் அதை கண்டிப்போம்.
இந்த கஞ்சாக்காரன் நாகி மைனாவின் மடியிலிருந்து டீல் ரணி லின் மடிக்கு ஜம் அடித்துள்ளான். இந்த கஞ்சாக்காரனின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்கள் தளத்தின் தரத்தைக் கெடுத்திக் கொள்ளவேண்டாம் என பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.
ReplyDelete"எமது கட்சியை பொறுத்தவரை நாட்டின் நலனே பிரதானமானதாகும். நாட்டுக்காக யார் சேவை செய்தாலும் அதை பாராட்டுவோம். நாட்டை யார் சீரழிக்க முயன்றாலும் அதை கண்டிப்போம்."
ReplyDeleteWho cares about what you say? Even people in your home town, Kalmunai, have no regard for you. First and foremost, you must contest an election and prove that you have a following. Your giving statements without proving your support base means NOTHING. Please, DON'T waste our time when you are a non-entity now.