Header Ads



ஜோன்ஸ்டன் ஜனாதிபதியாகவும், மகிந்தானந்த பிரதமராகவும் பதவியேற்பதால் பிரச்சினை தீராது


பொதுமக்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா கோரியுள்ளார்.

நாட்டில் இன்று மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் இல்லாமல் போகும் என்று பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றபோதும் போராட்டங்கள் தொடரும் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை ஒழிக்கும் போது நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில், விகிதாசார தேர்தல் முறை தொடரவேண்டும் என்றும் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

நாட்டில் இன்று பதவிகளை மாற்றுவதால் பிரச்சினை தீரப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர்,  ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ அரச தலைவராகவும், மகிந்தாநந்த அளுத்கமகே பிரதமராக பதவியேற்பதால் பிரச்சினை தீராது என்றும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.