பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு, வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் மரணம்
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு அனுமதி அளித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவோர் தனிநபர்களை தாக்குதல் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்று 09.05.2022 இடம்பெற்ற மோதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்
மேலும் 41 வாகனங்களும், 65 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக, ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 8 பேரில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும்இ இருவர் தென் மாகாணத்தில் நடந்த வன்முறையின்போதும் பலியாகியுள்ளனர்.
Post a Comment