71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்த என்னை, ராஜபக்ச குடும்பத்தின் பராமரிப்பாளராக்க வேண்டாம்
71 தடவைகள் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், இன்றும் பிரதமர் பதவியை நிராகரித்தது இந்த நாட்டில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு துரோகமிழைக்காமல், அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக என்றும் தெரிவித்தார்.
மேலும் தம்மை ராஜபக்ச குடும்பத்திற்குப் பொறுப்பான பிரதம பாதுகாப்பு அதிகாரியாகவோ அல்லது அவர்களின் பராமரிப்பாளராகவோ நியமிக்குமாறு கேட்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்கைகளுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும், 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவும், 20 ஆவது திருத்தத்தை நிராகரிக்கவும் தாம் தயார் எனவும், இந்த நாட்டு மக்களுக்கு மனித உரிமைகள், பொருளாதார உரிமைகளை வழங்கி அந்தக் கடமையை நிறைவேற்றத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளை மதிக்கும் புதிய அரசியல் பயணத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எவ்வாறாயினும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Really appriciable
ReplyDelete