5 பில்லியன் டொலர் கிடைக்குமென கூறிய ரணில், இதுவரை ஒரு டொலரும் வரவில்லை - பாயக் காத்திருக்கும் பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன் டொலர் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கூறியிருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
எனினும் இதுவரை 5 பில்லியன் டொலர்களை மாத்திரமல்ல, டொலர்கள் எதனையும் நாட்டுக்கு கொண்டு வர பிரதமர் தவறியுள்ளதாக கூறியே பொதுஜன பெரமுனவுக்குள் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், அடுத்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பிரதமரிடம் இது குறித்து கேள்விகளை எழுப்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராகி வருவதாகவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
இந்த ரணில் பொய்,புரட்டிப் பேசுவதில் அவருக்கு நிகராக யாரும் இல்லை. பெய்யில் எழுந்த ஆட்சியை பொய்யின் அடிப்படையில் கொண்டு செல்லத் தகுதியும் தகைமையும் உள்ளவர் தான் இந்த ரணில் அவரிடம் வேறு எதையும் புதிதாக எதிர்பார்ப்பது பொதுமக்களின் மடத்தனம் மட்டும் தான் மெதமுலானையை பாதுகாக்கும் காப்பாளர் தொழிலை மாத்திரம் சிறப்பாக மேற்கொள்வார். அது தவிர்ந்த மற்ற நிர்வாகம் தொடர்பான அனைத்தும் பொய்யும் புரட்டும் மாத்திரம்தான்.
ReplyDelete