ஜனாதிபதி 4 சுவர்களுக்குள் சிக்கியுள்ளார் - சஜித்
தற்போது நாடு தீர்மானமிக்க நெருக்கடியில் உள்ளதாகவும் அந்நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அந்தப் பொறுப்பின் பிரகாரம் பதவிகளைப் பெறாமல் அரசாங்கத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் எனவும் தெரிவித்தார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர்களை சலுகைகளுக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் தம் பக்கம் சாதகமாக்கிக் கொள்ள அரசாங்கம் முற்பட்டால் அவ்வாறான ஆதரவு அரசாங்கத்திற்கு வழங்கப்பட மாட்டாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அறுபத்தி எட்டு இலட்சம் வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் இன்று வீழ்ந்துள்ளதாக தெரிவித்தாக எதிர்க்கட்சித் தலைவர், அறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி இன்று நான்கு சுவர்களுக்குள் சிக்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் அதிகாரத்திற்கு அனைவரும் அடிபணிந்தவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (16) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment