பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் - வெளிவிவகார அமைச்சர்,
தினேஷ் குணவர்தன - பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்.
பிரசன்ன ரணதுங்க - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்.
காஞ்சனா விஜேசேகர - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள் கடந்த அரசாங்கத்திலும் அமைச்சர்களாக இருந்தனர். அத்துடன் இன்று -14- பதவியேற்ற அமைச்சர்களில் எவருமே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது வேறு கட்சியைச் சார்ந்தவர்களாகவோ இல்லை.
113 என்ற ஆதரவை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மொட்டு அரசின் வீதி நிர்மாணப்பணிகள் மூலம் கிடைக்கும் தரகுப்பணத்திற்கும், ஏனைய வரப்பிரசாதங்களுக்கும் ஏமாந்து, 20 ற்கு வாக்களித்து முழுச் சமூகத்தையும் காட்டிக்கொடுத்த கயவர் கூட்டம். அத்துடன் இவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு இடம் வழங்கிய, ஐக்கிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் சஜீத் உட்பட வாக்களித்த இனபந்துக்கள், தொகுதி மக்கள், சமூகம், சமயம், கலாச்சாரம் ஆகிய அனைத்திற்கும் மாபெரும் நம்பிக்கை துரோகம் செய்த மண்ணிக்க முடியாத
ReplyDelete"அழுகிய பிணங்களைச் சுவைக்கும் கழுகுகள்". தற்பொழுது இவர்கள் மீண்டும் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை, ஏற்றுக்கொள்ளமுடியாது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் உட்பட அனைத்து இன மக்களாலும் மிக அருவருப்பான ஜந்துகளாக பார்க்கப்படும், இவர்களுடன் அரசியல் நட்பு கொள்வது, சஜீதீன் செல்வாக்கை வெகுவாகப் பாதிக்கும். பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான், மரைக்காயர், முஜீப் நீங்கள் அனைவரும் எங்கு உள்ளீர்கள். தற்பொழுது இக்கயவர் கூட்டம் தங்கள் தலைமையகத்திற்குள் ஊடுறுவியுள்ளனர். ஜாக்கிரதை!இலகுவில் பணம் சம்பாதிப்பதற்கு அரசியல் உகந்த வழியல்ல. இந்தியாவின் தாராவி அல்லது தாய்லாந்தின் பாங்காக் நகரங்களுக்கு செல்லுங்கோ!
அங்கு அதிகம் பணம் பார்க்கலாம்.