Header Ads



நாட்டை பொறுப்பேற்க 4 நிபந்தனைகளை விதித்துள்ள சஜித் தரப்பு (முழு விபரம் உள்ளே)


ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

தற்போது நாட்டு மக்கள் முகம் கொடுத்து இருக்கும் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவிப்பதற்காகவும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பிரதான எதிர்க்கட்சியாக பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டு நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

01.பொதுமக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்ட, குறைந்தபட்ச காலத்திற்குள் பதவி விலக சம்மதிக்க வேண்டும்.

02.குறுகிய காலத்திற்கு ஸ்தாபிக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தின் மீது ஜனாதிபதி எந்தவொரு செல்வாக்கையும் செலுத்தக் கூடாது.

03.அரசியலமைப்பின் தற்போதுள்ள ஏற்ப்பாடுகளுக்கு ஏற்ப, மிகக் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கும்,இதன் பொருட்டு அனைத்துக் கட்சிகளினதும் ஒப்புதலை பெறவும் வேண்டும்.

04.மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திருப்பி,சட்டத்தின் ஆட்சியை நிறுவுவதன் பின்னர் ஸ்திரமான ஆட்சியை விரைவாக அமைக்க மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ரன்சித் மத்தும பண்டார(பா.உ)

பொதுச் செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தி

No comments

Powered by Blogger.