48 மணித்தியாலத்தில் ரணில் பிரதமர் ஆகிறார், 113 பேரின் ஆதரவு கிட்டுமா..? தனக்கு ஆதரவளிக்க கெஞ்சுகிறார் - சஜித் தரப்பிலிருந்து 10 பேர் பல்டியா..?
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் பதவியேற்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ஸ ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே ரணில் நியமிக்கப்பட உள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த ஹரீன் பெணான்டோ உள்ளிட்ட 10 பேர் ரணிலுக்கு ஆதரவாக செயற்படலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
இன்று 11 ஆம் திகதி புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை பாராளுமன்றத்தில் தனக்கான ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திலும் ரணில் உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல தரப்பினரிடம் தாம் பிரதமராக நியமிக்கப்பட்ட ஆதரவளிப்பீர்களா எனத் தொலைபேசி ஊடாக விக்கிரமசிங்க கேட்டுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ரணில் பெற்றாலே அவரால் பிரதமராக செயற்பட முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை புதிதாக நியமிக்கப்படவுள்ள அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தயார் எனஇ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும்இ இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இன்று (11) ஆற்றிய விசேட உரையின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட சிலர் தமது கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அறிய வருகிறது.
ஏற்கனவே நாடு இந்த நிலைக்கு வருவதற்கு இவனும் முக்கிய காரணம் மீண்டும் இவன் வேண்டுமா!?
ReplyDeleteமக்களின் கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவிசாயப்பாரா!?
It will be a wasteful exercise
ReplyDeleteHe is the main reason for this pittiest situation in this country? coming again?? hypocrite stupid...
ReplyDelete