உண்டியல் மூலம் 47 ஆயிரம் டொலர்களை மாற்ற முயன்ற 2 பேர் கைது
உண்டியல் முறையின் ஊடாக 47,000 அமெரிக்க டொலர்களை, மாற்ற முயன்ற 2 பேர் பொரலஸ்கமுவவில் வைத்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உண்டியல் பணப் பரிமாற்று முறை, சட்டவிரோதமானது என்ற அடிப்படையில், அமெரிக்க டொலர்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் குறித்த முறையின் மூலம், பணத்தை அனுப்ப வேண்டாமென அண்மைக்காலமாக மத்திய வங்கி அறிவுறுத்தி வந்துள்ளது.
எனினும் உண்டியல் முறையின் ஊடாக, அதிகளவு பணப் பெறுமதி கிடைப்பதால், வங்கி முறைகளை கைவிட்டு உண்டியல் முறையின் மூலமாகவே அதிகளவு பணத்தை அனுப்பி வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment