Header Ads



3 நாட்களுக்கு எரிபொருள் பெற வரிசையில் காத்திருக்க வேண்டாம் - எரிபொருள் சேகரிக்கவும் வேண்டாம்


நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையில்லாமல் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்திய கடன் வசதியின் கீழ் மேலும் மூன்று எரிபொருள் கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வரவுள்ளதாக அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றும் டீசல் கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அமைச்சர் அந்தச் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.