ரணில் பிரதமராகுவதற்கு முன் பொன்சேக்காவை 3 தடவையும், சம்பிக்கவையும் சந்திந்த ஜனாதிபதி
பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு முன்னாள் ஜனாதிபதி வேட்பளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேக்கா ஜனாதிபதியை 3 தடவைகள் சந்தித்து பேசியுள்ளார்.
யாரை பிரதமராக நியமிப்பது என்ற தீர்மானத்தை எடுப்பதில் ஜனாதிபதி சிக்கலை எதிர்நோக்கியிருந்த வேளையில் அவருக்கு பல்வேறு பரிந்துரைகளும் பல தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வேளையில்தான சரத் பொன்சேக்காவும் ஜனாதிபதியை 3 தடவைகள் சந்தித்ததாகவும், அவ்வாறே அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஒரு தடவை சந்தித்தாகவும் அரசியல் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டின.
எனினும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உருவாக்கப்படும் அரசாங்கத்தின் கீழ் எந்த பதவியையும் ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாரில்லையென கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ராஜபக்ஷர்ளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நோக்கமாக இருக்கக்கூடாது. அது காலத்தின் தேவையும் அல்லஇ மாறாக சர்வகட்சி அரசாங்கம் சில முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment