Header Ads



கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 3 மாணவர்கள்



- பாறுக் ஷிஹான் - 

3 பாடசாலை மாணவர்கள்  கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு   மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 17 முதல் 18 வரை வயது மதிக்கத்தக்க அங்குள்ள பிரபல பாடசாலை  மாணவர்களே இவ்வாறு இவ்வனர்த்தத்தில் சிக்கிக்கொண்டதுடன் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .

வழமை போன்று குறித்த கடற்கரைப்பகுதியில் விளையாடிய பின்னர் இவர்கள் மூவரும் குளிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற நிலையில்    இவ்வாறு கடலில் இழுத்துச் சென்றுள்ளது.இதில்  ஒருவர் மீட்கப்பட்டதுடன் ஏனைய இருவரை   தேடும் பணியில்  கடற்படையினர் கடற்தொழிலாளர்கள் உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.