வன்முறையில் ஈடுபட்ட 398 பேர் இதுவரை கைது
காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டிய மற்றும் நாடளாவிய ரீதியில் நபர்களைத் தாக்கி பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 398 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி முதல் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இவர்களில் 159 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
Post a Comment