காலிமுகத் திடல் இன்றும் அதிர்ந்தது - இன்று 37 ஆவது நாள், ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று ஞாயிற்றுக்கிழமை 15 ஆம் திகதியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அரசாங்கத்திற்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஸ வீடு செல்ல வேண்டுமென்பதே ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
புதிய பிரதமர், புதிய அமைச்சரவை, கடந்த வார வன்முறைச் சம்பவங்களினால் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்குமென சிலர் எதிர்வுகூறியிருந்த போதிலும் பெரும் எணிக்கையிலான மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று 37 நாட்கள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment