Header Ads



300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு - டொலர் நெருக்கடி மாத்திரம் காரணமில்லையாம்..!


நோயாளிகளுக்கு தேவையான சுமார் 300 அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் ஆயுட்காலத்தை நேரடியாக பாதிக்கும் 25 அத்தியாவசிய மருந்துகள் எந்தவொரு அரச மருத்துவமனைகளிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி தீவிர இதய நோய்க்கான மருந்துகள், புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள், நீரிழிவு நோய்க்கான தடுப்பூசிகளான இன்சுலின் போன்றவையே இவ்வாறு அரச மருத்துவமனைகளில் இல்லை எனவும் , மேலும் இந்த 25 மருந்துகளுக்கும் தனியார்துறை மருந்தகங்களிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு மட்டுமின்றி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியின் திறமையின்மை மற்றும் மோசமான நிர்வாகமும் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என சுகாதார அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.