புதிய அமைச்ரவையில் 15 பேர் - சிறுப்பான்மை கட்சிகளுடன் பேரப் பேச்சு
புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ள கையோடு புதிய அமைச்சரவையையும் நியமிக்க முழு முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அந்நவகையில் இன்னும் சில தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 4 பேருக்கு இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் வாய்ப்பு கிட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஜீவன் தொண்டமான, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இடம்பெறவுள்ளனர்.
எனினும் ஜனாதிபதி தமது நியமானமாக 5 இளவயதினரை நியமிக்க உள்ளதாகவும், எனினும் இது உறுதி செய்யப்படவில்லை எனவும் அறிய வருகிறது.
Post a Comment