பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பொலிஸ் பாதுகாப்பு 10 ஆக உயர்வு
பாரளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அவர்களுடைய சொத்துக்கள் எரியூட்டப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்களினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை ஈடுபடுத்துமாறு பொலிஸ் தலைமையகத்தினால் அறுவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக 6 பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும், மேலதிகமாக 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வழங்கப்படவுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக T56 ரக இரண்டு துப்பாக்கிகளையும் பாதுகாப்பு உத்தியோகத்தர் குழுவிற்கு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை மே மாதம் 9ஆம் திகதி ரீதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா பதில் நீதவான் இந்திராணி அத்தநாயக்க உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யும் அதிகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாபஸ் பெறப் போவதாக குறிப்பிட்டுள்ளதும் அவதானிக்கத்தக்கது.
Post a Comment