பிரதமர் ஆகுவாரா ரணில்..? கோட்டபயவுடன் அவசர சந்திப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று மாலை புதன்கிழமை 11 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து முன்னாள் பிரதமர் ரணில் பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் விடுத்த கோரிக்கை தொடர்பில் அக்கட்சியின் ஊடகப் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
காலி முகத்திடல் மைதானத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என, பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் ரணில் பிரதமராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Post a Comment