IMF நிதி வர 6 மாதங்களாகும், மேலதிக நிதியுதவிகளை தேடவுள்ள இலங்கை - பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது
இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக மேலும் 500 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர பங்களாதேஷ் நாட்டுக்கு செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலரை திரும்ப செலுத்த கால அவகாசத்தை வழங்க அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நிதியுதவி கிடைப்பதற்கு சுமார் ஆறு மாதம் காலம் செல்லும் எனவும் அந்த நிதியுதவி பகுதிப் பகுதியாக கிடைக்கும் என்பதுடன் அந்த நிதியுதவி கிடைக்கும் வரை மக்களுக்கான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள தேவையான நிதியுதவியை தேடிக்கொள்ள வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment