Header Ads



ஜனாதிபதி மற்றும் பிரதமரை நீக்க முயற்சி, நிதி எங்கிருந்து வருகிறது..? (வீடியோ)

 


அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வு இன்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறித்து சட்டத்தரணிகள் பிரதமருக்கு விளக்கம்


அரசாங்கத்திற்கு ஆதரவான சட்டத்தரணிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (18) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.


நாட்டில் இதுவரையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதக நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதியை நீக்குவதானது ஆர்;ப்பாட்டக்காரர்கள் கூறுவது போன்று செய்வதற்கு முடியாததொரு விடயமாகும் என்றும் அரசியலமைப்பு தொடர்பில் தெளிவான புரிதல் இன்றி, தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழுவினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது போன்று தோன்றுவதாகவும் இதன்போது சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

No comments

Powered by Blogger.