Header Ads



காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு - பொலிஸார் மூக்குடைபட்டனர்


காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக  உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற பொலிஸாரின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின்  பெயர் விபரங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் கூடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கும்  ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பவர்களிற்கும இடையில் மோதல்கள் இடம்பெறலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக 16 தனிநபர்களிற்கு எதிராக உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர்.

வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது பொது குழப்பம் இடம்பெறுவதற்கு முன்னர்  உத்தரவினை பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

எனினும் வன்முறைகள் நிகழ்ந்தால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.