இடைக்கால ஆட்சி என்பது அரசியலமைப்பில் இல்லை, எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும்
இடைக்கால அரசாங்கம் என எதை நடைமுறைப்படுத்த தயாராகிறீர்கள் என்பதை முதலில் ஜனாதிபதியிடம் கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
அதன் பின்னரே கட்சியில் இணைவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இடைக்கால ஆட்சி என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத புதிய கருத்து என்றும், கட்சி என்ற வகையில் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இது தொடர்பில் ஜனாதிபதி இதுவரையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அறிவிக்கவில்லை எனவும், எதிர்காலத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கட்சியின் நிலைப்பாடு ஜனாதிபதியின் யோசனைக்கு எதிரானது அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment