Header Ads



சர்வதேச ஊடகத்திடம் தரங்குறைவாக நடந்துகொண்ட ரணில், தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அழைப்பையும் துண்டித்தார்


சர்வதேச ஊடக நிறுவத்தின் செய்தி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வி காரணமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடும் கோபமடைந்த நிலையில் காரசாரமான பதில்களை வழங்கியள்ளார்.

CNBC செய்தி சேவையின் மூத்த செய்தி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போதே ரணில் கடும் கோபமடைந்துள்ளார்.

ராஜபக்ஷ சகோதரர்கள் அனைவரையும் பதவி விலகுமாறு மக்கள் கூறுகின்றார்கள். ராஜபக்ஷர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் செயற்பட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டிற்கு புதிய தலைமைத்துவங்கள் தேவைடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியில் 30 ஆண்டுகால தலைமைத்துவத்தில் இருக்கும் நீங்கள் ஏன் பதவி விலக்கூடாது. முழுமையாக புதியவர்கள் கையில் நாட்டை ஏன் ஒப்படைக்க கூடாதென ஊடகவியலாளர் ரணிலிடம் வினவியுள்ளார்.

இதன் போது பொறுமையை இழந்த ரணில், நான் பல யோசனைகளை சமர்ப்பித்துள்ளேன். மக்களுக்கு வேண்டும் என்றால் நான் செல்கின்றேன். நீங்கள் 4000 மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கின்றீர்கள் நான் இருக்கின்றேன் என கூறியவர் தகாத வார்த்தை ஒன்றையும் இதன் போது பயன்படுத்தியுள்ளார்.

எனது யோசனைகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் கடினமான பதில்களை எதிர்பார்த்தால் நானும் கடினமான பதில்களை வைக்க முடியும். 4000 மைல் தூரத்தில் இருந்துக் கொண்டு ஒன்றும் பேசாதீர்கள்.

நான் உலக வங்கியிடம் பேசியுள்ளேன். இந்தியாவிடம் பேசியுள்ளேன். ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளேன். உங்களுக்கு நான் பதவி விலக வேண்டும் என்றால் நான் பதவி விலகுகின்றேன். நீங்கள் ஆங்கில மக்களுக்கு செய்தி வெளியிடுகின்றீர்கள்.

முட்டாள்தனமான கேள்விகளை கேட்கின்றீர்கள் என கூறிவிட்டு திடீரென அவர் அழைப்பை துண்டித்துவிட்டு சென்றுள்ளார்.

2 comments:

Powered by Blogger.