யாழ்ப்பாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, அமெரிக்கத் தூதுவர் கேட்டறிந்தார்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கில் மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியானுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
நாவாந்துறை வீதியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இதில் மீளக்குடியேறியுள்ள மக்களுக்கான காணி, வீட்டுத்திட்டம், வாழ்வாதாரம் இன்மை போன்ற பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த அரசாங்கமோ, தற்போதைய அரசாங்கமோ கருத்திற்கொள்ளவில்லை.முஸ்லிம் வாழ் சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் யாழ் முஸ்லிம் மாவட்ட மக்கள் பணிமனையின் தலைவர் மௌலவி எஸ்.ஏ.சுபியான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
யாழ்.விசேட நிருபர்
Post a Comment