கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பாதயாத்திரை - பேருவளை நகரில் ஆரம்பமாகும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்தார்.
17ஆம் திகதி காலை 9 மணிக்கு களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமாகும் பாதயாத்திரை, 19 ஆம் திகதி கொழும்பை வந்தடையும் என வும் அவர் கூறினார். இது மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான போராட்டம் என்பதால் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Post a Comment