Header Ads



ஜனாதிபதி - சுதந்திரக் கட்சி பேச்சு தோல்வி, அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகத் செயற்படத் தீர்மானம்


ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சுந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க, இன்று (04) தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு, பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசாங்கக் கூட்டமைப்பிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது 14 எம்.பிக்களுடன், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக அமரத் தீர்மானித்துள்ளது.

அத்துடன், கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் நாளை (05) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கான தமது அழைப்புக்கு அரசாங்கம் செவிசாய்க்காவிட்டால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவோம் என்று கட்சி ஏற்கெனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.