அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பிரவேசிக்கப் போவதில்லை - ஹரின்
இந்தப் போராட்டத்தினை அரசியல் போராட்டமாக மாற்றுவதற்கு உத்தேசமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை போராட்டத்திற்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தப் போவதில்லை.
எந்தவொரு அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்குள் பிரவேசித்து இடையூறு செய்யக் கூடாது.
எவ்வாறெனினும், எதிர்க்கட்சியினர் தங்களது போராட்டத்தை நாடாளுமன்றில் முன்னெடுக்க அனுமதிக்குமாறு அவர் இளைஞர்களிடம் கோரியுள்ளார்.
அத்துடன் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வீடு செல்லுமாறு கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையில் நாடாளுமன்றில் குரல் கொடுக்க பிரதிநிதித்துவம் தேவை.
இலக்கு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் யார் நாடாளுமன்றில் இருக்க வேண்டும் யார் இருக்க கூடாது என்பதனை இளைஞர்கள் தீர்மானித்துக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment