சாரா இந்தியாவில் உயிருடன் உள்ளார் - ஹிஜாஸை சூத்திரதாரியாக்கவும், ரிசாத்தை சிக்க வைக்கவும் முயன்றனர்
சாரா ஜெஸ்மின் இன்று இந்தியாவில் உள்ளார். அவர் இன்னும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட பிரதான தலைவருடன் சாரா ஜெஸ்மின் இருந்தார். எனினும் சாரா ஜெஸ்மின் இப்போது இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுவாஞ்சிக்குடி முன்னாள் OIC தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்றும் சிறையில் உள்ளார். அவரே சாரா ஜெஸ்மினை இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.
சாரா ஜெஸ்மின் இன்று இந்தியாவில் உள்ளார். அவர் இன்னும் உயிரிழக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு ஏற்ப அவரின் தாயாருடைய மரபணு மூலம் அது உறுதியாகியுள்ளது.
அன்று உயிரிழந்தவர்களில் சாரா ஜெஸ்மின் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சாரா ஜெஸ்மினை கைது செய்வதற்கு இன்னும் இந்த அரசாங்கம் சர்வதேச பிடியாணை பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என இவர்கள் காண்பிக்க முயன்றனர். முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை இதில் சிக்க வைக்க முயன்றனர்.
அவ்வாறானால் இந்த தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களை அரசாங்கம் ஏன் இதனுடன் தொடர்புபடுத்த முற்பட்டது என சபாநாயகரிடம் முஜிபுர் ரஹ்மான் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
Ivarukku ore SARA SARA thaan
ReplyDelete