நாட்டின் சிறப்பு அதிகாரம் படைத்தவர் மீது, மல்கம் ரஞ்சித்திற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளியிடப்படாமல் இருக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர் நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக்கொண்ட சிறப்பு அதிகாரம் படைத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் மேடையில் நேர்மையாக உண்மையை கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவதாக முழக்கமிட்டு தேர்தலுக்கு சென்ற நாட்டை ஆட்சி செய்யும் ஆடசியாளர், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு செயற்பட்டு வருகிறார்.
உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் கூக்குரல்கள் வாகனத்தை நோக்கி முழக்கமிடுகின்றன, இந்த தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபன்களை அனுபவிக்க நேரிடும் என முழுமையான நம்புகிறேன் எனவும் பேராயர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் இன்று -20- நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
Post a Comment