இலங்கை வந்த இஸ்ரேலியரின் அதிரடிச் செயற்பாடு
அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான நீண்ட வரிசையில் நின்ற மக்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உதவி செய்துள்ளார்.
வெலிகம பிரதேசத்தில் வெயில் மழை பாராமல் சதொச வரிசையில் நின்ற 129 பேருக்கு 5 கிலோ அரிசியை கையளித்ததுடன் மருந்து வாங்க வந்தவர்களுக்கு தலா 2000 ரூபாயும் வழங்கியுள்ளார்.
இஸ்ரேல் பிரஜையான கிரே ரோஸ்ம்ப்ராக் என்பவரே இந்த உதவிகளை வழங்கியுள்ளார்.
தனது சேவையை ஊடகங்கள் வாயிலாக பாராட்டுவதாகவும், அது தனக்கு பெரும் பலமாக இருப்பதாகவும் கிரே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மேலும் பல சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி வெலிகம சதொசவுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்த 129 பேருக்கு 5 கிலோகிராம் அரிசி பொதிகளை இலவசமாக வழங்க கிரே ரோசம்பிரக் நடவடிக்கை எடுத்தார்.
கடுமையான வெயிலுக்கு மத்தியிலும் அவர் இந்த சேவையை செய்துள்ளார். 110 ரூபாயில் அரிசி பெறலாம் என்ற எண்ணத்தில் சதொச விற்பனை நிலையத்தில் மக்கள் குவித்திருந்தனர். இதன்போது அந்த இடத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்த வெளிநாட்டு சுற்றிலா பயணி ஒருவர் நீண்ட வரிசை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
அதற்கமைய ஏனைய கடைகளில் அரிசி 210 ரூபாய்க்கும் சதொசயில் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் அறிந்துக் கொண்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் வரிசையில் நின்ற 123 பேருக்கும் தலா 5 கிலோ கிராம் அரிசியை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் தீர்மானித்தார். அதற்காக 80ஆயிரம் ரூபாய் பணத்தை வெலிகம சதொசவுக்கு குறித்த வெளிநாட்டவர் செலுத்தியுள்ளார்.
அதே போன்று 23ஆம் திகதி காலி, கராபிட்டியவில் உள்ள அரச மருந்தகத்திற்கு சென்ற போது அங்கு நின்ற 20 பேருக்கு மருந்து கொள்வனவு செய்வதற்காக தலா 2000 ரூபாய் பணம் வழங்குவதற்கும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உதவிகளை செய்ய விரும்புவதாகவும் வெளிநாடுகளில் வாழ்பவர்களையும் இலங்கை மக்களுக்கு உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment