இலங்கையை வாங்கி "சிலோன் மஸ்க்" என பெயரிடுமாறு, உலகப் பணக்காரரிடம் பரிந்துரை
எலோன் மஸ்க் 43 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் வாங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்த அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“டுவிட்டரின் பெறுமதி 43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், இலங்கையின் கடன் 45 பில்லியன் டொலர்கள் என குறிப்பிட்டுள்ள ஸ்னாப்டீல் தலைமை நிர்வாக அதிகாரி, இலங்கையை வாங்கி சிலோன் மஸ்க் என்று அழைக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார். எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய பின், நிர்வாகக் குழுவில் இடம் அளித்தும் மறுத்துவிட்டார். இது டுவிட்டர் முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டொலர் கொடுத்து வாங்க தயார் என அவர் அறிவித்துள்ளார். மொத்த விற்பனைத் தொகையும் பணமாக அளிக்கத் தயார் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment