அமெரிக்கா பறக்கிறார் அலி சப்ரி - கடன் பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர்.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தின் சர்வதேச கடனை மறுசீரமைக்க உதவும் நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள் 21 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMF ஏற்கனவே இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியதாக நேற்று அறிவித்தபின்னரும் புதிய நிதியமைச்சர் ஏன் அமெரிக்கா செல்கிறார் என உள்ளகத்தில் விசாரித்தபோது அண்மையில் அமெரிக்காவில் பாடசாலையில் சேர்த்த புதிய நிதியமைச்சரின் பிள்ளையைக்காண அரச செலவில் அமெரிக்கா செல்கின்றார் எனத் தெரியவந்துள்ளது. இது தானா அரச பணத்தை தனது சொந்த செலவுக்கு பயன்படுத்துவதற்கு உங்கள் மார்க்கம் உங்களை அனுமதிக்கின்றதா என பொதுமக்கள் கேட்கின்றனர்.
ReplyDelete